Sunday, January 01, 2006

சிங்கப்பூரில் "அலையில் பார்த்த முகம்" கவிதை நூல் வெளியீடு



அன்பு நண்பர்களே...

1983 முதல் 2005 வரை நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பாக "அலையில் பார்த்த முகம்" வெளிவருகிறது.

உதிரிகளாக இருந்த கவிதைகளை மாலையாக்கி இருக்கிறேன். நடந்து வந்த பாதைகளின் சுவடுகளாக நிறைகளோடும், நெருடல்களோடும், நிம்மதியோடும், ஒரு குழந்தையின் அப்பாவித்தனங்களோடும் கூட, இக்கவிதைகள் வடிந்து கிடப்பதைப் பார்க்கிறேன். வளர்ந்திருக்கிறோம் என்பதில் திருப்தியும், இன்னும் வளர எவ்வளவோ உயரமிருக்கிறதே என்ற உணர்வும் ஒரு சேர ஏற்படுகிறது.

உங்களோடு அந்த உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கும் ஒரு எத்தனிப்பே இந்த நூல் வெளியீட்டு விழா. நண்பர்களோடும், குடும்பத்தாரோடும் கலந்து கொள்ளுங்கள், காத்திருக்கிறேன்!

அன்புடன்

பாலு மணிமாறன்
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்: