Monday, November 14, 2005

மலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கிய மாநாடு

மலேசியா, சிங்கப்பூர் நாடுகளின் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை அடையாளம் காட்டும் மாநாடு ஒன்றினை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்தவிருக்கிறது.

மாநாட்டின் கருப்பொருள்: "மலேசிய-சிங்கப்பூர் நாடுகளில் பன்மொழி இலக்கியங்களினூடே தமிழ் இலக்கியத்தின் நிலை"
இடம்: கிராண்ட் பசிபிக் ஹோட்டல், கோலாலம்பூர் - மலேசியா.
நாள் : 26, 27 நவம்பர் 2005

மலேசியத்தமிழ் இலக்கியம் குறித்து மலாயாப் பலகலைக்கழ இந்திய ஆய்வியல் தலைவர் இணை பேராசிரியர் முனைவர் சபாபதி அவர்களும், சிங்கைத்தமிழ் இலக்கியம் குறித்து சிங்கை தேசியக்கல்விக்கழகத் தமிழ்மொழி, பண்பாட்டுதுறை தலைவர், துணைப்பேராசிரியர், முனைவர் சீதாலட்சுமி அவர்களும் பேசுவார்கள்.

மேலும் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள், கலந்துரையாடல்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இருநாடுகளையும் சேர்ந்த இலக்கியவாதிகள் பங்கு பெறும் "உலக தமிழ்ப் புத்திலக்கியத்தில் மலேசிய சிங்கப்பூர் இலக்கியங்களின் இடம்" என்னு கருத்தரங்கமும், இரு நாடுகளையும் சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி மாணவ்ர்களின் கட்டுரைகளும் இடம்பெறுகிறது.

புதிய தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் என்ன சாதித்துள்ளது என்பதை ஆராயத் தனி அமர்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அமர்வில் முரசு முத்து நெடுமாறன் அவர்களும், திரு. அருண் மகிழ்நன் அவர்கள் உட்பட சிலரும் கலந்துகொள்கிறார்கள். அதில் இணையத்தில் தமிழ்மொழி, தமிழ் இலக்கிய வளர்ச்சி குறித்தும் பேசப்படும்.

மாநாட்டில் இரு நாடுகளின் தமிழ் இலக்கிய வரலாறுகளையும் ஒருங்கிணைத்து விரைவில் விரிவான நூல் உருவாக அடித்தளம் அமைக்கப்படும்.

மேல் விபரங்களுக்கு:
திரு ந. பச்சைபாலன்,
செயலாளர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்,
19 Jalan Murai Dua,
51200 Kuala Lumpur

அல்லது

சிங்கையில் தொடர்புகொள்ள :
முனைவர் சீதாலட்சுமி
தொலைபேசி எண்: 94510735, 67903521

மாநாடு இனிதே நடைபெற சிங்கைமுரசு குழுவினரின் வாழ்த்துக்கள்.

தகவலுக்கு நன்றி: சிங்கை தமிழ்முரசு நாளிதழ்.
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்: