கவிஞரேறு திரு. அமலதாசன் நூல்வெளியீட்டு விழா
தொகுப்பு : சித்ரா ரமேஷ்
அன்புள்ள நண்பர்களுக்கு,கவிஞரேறு அமலதாசன் நூல்வெளியீட்டு விழாவைப் பற்றிசித்ரா எழுதுவாங்கன்னுஒரு புரளி கிளப்பிய ஒருஇனிய உடன் பிறவாச் சகோதரர்எங்கே என்று தேடி கொண்டிருக்கிறேன். நல்லா ஒரு நன்றி சொல்லத் தான்!
வழக்கம் போல் செயலவைஅங்கத்தினர் அனைவரும் மாலைநான்கு மணிக்கெலாம் வந்துவிட வேண்டும் என்று செயலாளர் ஆண்டியப்பன் அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார்.வழக்கம் போல் கிட்டத்தட்ட வியர்க்க விறுவிறுக்க நாலே முக்காலுக்கெல்லாம் போய் சேர்ந்தேன். செயலாளர் மணி என்ன ன்று விசாரிக்க நானும் மணி என்ன ஒரு நாலரை மணி இருக்குமா என்று அப்பாவியாகக்கேட்டுவிட்டு என்னுடைய அலுவல்களில் மூழ்குவது போல் எதையோத் தேடினேன். தண்டாயுதாபாணி கோவிலில் திருமண மண்டபத்தை குளிர்சாதன வசதி படைத்ததாக மாற்றி விட்டனர். அதனால் கொஞ்சம் குளிர்ச்சியாக இருந்தது.இல்லையென்றால் போனவுடன்ரத்தக் கொதிப்பு ஏறியிருக்கும். (யாருக்கு?)
மாலை, பொன்னாடை, நினைவுப் பரிசு என்று இதெல்லாம் எப்போதும் என் பொறுப்பு தான். இந்த முறையும் மதுரையிலிருந்து ஏலக்காய் மாலை! கல்வி அமைச்சர் திரு.தர்மன் சண்முகரத்தினத்திற்கும், விழா நாயகர் திரு அமலதாசனுக்கும் போடுவதற்கு! எடுத்து வைக்கும் போதே வாசனை கமகமத்து ஏலக்காய் மசாலா தேநீரை நினைவுப் படுத்தியது! உண்மையாகவே தேநீர் இடைவேளை வந்து விட்டது!
கோவில்மடப் பள்ளியிலிருந்து தான் ஏற்பாடாகியிருந்தது. மடப்பள்ளி! தவறான வார்த்தையோ! பெருமாள் கோவிலில் புளியோதரையும் ததியோன்னமும் அக்காரவடிசலும் செய்தால் தான் மடப்பள்ளி! நிஜமாகவே இந்த சமையலறையில் உப்பா சர்க்கரையா என்றுகுழம்பிவிட்டார்கள்! வடையில் உப்பு சரியாகத் தான் இருந்தது. கேசரியில் தான் சர்க்கரையே காணவில்லை. விஷயம் தெரிந்த பின்னர் அந்த ரவா உப்புமாவை இல்லை ரவா கேசரியை சாப்பிடாமல் டயட்டில் இருப்பது போல் நடிக்க விஷயம் தெரியாத நண்பர் ஸ்வீட் சாப்பிடுங்க என்று உபசாரம் செய்ய தப்பித்தோம் பிழைத்தோம் என்று இல்லை நான் ஸ்வீட்டாக இருந்தால் தான் ஸ்வீட் சாப்பிடுவேன் என்று உண்மையைச் சொல்ல அவர் நான் ஏதோசிரிப்புக் காட்டியதாக நினைத்துச் சிரித்தார். பாதிநேரம் நான் உண்மை பேசும் போதெல்லாம் இப்படித்தான் ஆகிவிடுகிறது. (குமாரே சாட்சி!)
விஜய் திட்டாதீங்க! அமலதாசனும் அல்வா கொடுப்பர் என்று நினைத்திருந்தேன். நமக்கு சர்க்கரை இல்லாத கேசரிதான் என்று விதி சிரிக்கும் போது திருநெல்வேலி அல்வாவுக்கு ஆசைப்பட முடியுமா? நிஜமாகவே திருநெல்வேலிக்குப் போயிருந்த போது இருட்டுக்கடை அல்வாவுக்கு அன்னிக்கு ஹாலிடே! இப்படி ஊர்ஊராகப் போனாலும் சிரிக்கும் விதியை எங்காவது பார்த்திருக்கீங்களா? இனி மேல் இலக்கிய நிகழ்வுகளைப் பற்றி எழுதும் போது இதைபற்றி யெல்லாம் எழுதக்கூடாது என்று யாரவது சட்டம் போட்டு விடப் போகிறார்கள். மணியன் என்றுஒருவர் பயணக் கட்டுரை எழுதுவார். அவருக்கு வடதுருவம், தென்துருவம், ஐஸ்லாந்து என்று எந்த நாட்டுக்குச் சென்றாலும் இட்லி, மிளகாய்ப் பொடி, வத்தக் குழம்பு செய்துத் தரஒரு தமிழ்க் குடும்பம் காத்திருக்கும். அதைப் போல எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் தேநீர் வரவேற்பு என்றிருக்கிறதே! அதை எழுதாமல் விட முடியுமா? கேசரியில் போடாமல் விட்ட சர்க்கரை எங்கே போயிற்று என்று தேநீர் ஒரு வாய் குடித்த பிறகுதான் தெரிந்தது. கேசரியில் சர்க்கரை அதிகம் வேண்டும், தேநீரில் சர்க்கரை குறைத்து வேண்டும் என்று எக்கச்சக்க வரங்களைக் கேட்டதில் முருகன் குழம்பிப் போய்விட்டார்.
திடீரென்று பரபரப்பு! மாண்புமிகு அமைச்சர் வந்துவிட்டார். மாலை மேள மரியாதைகளுடன் விழா மேடைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அதற்கு முன்னால் மேடைக்குச் சென்றுவிட வேண்டும் என்று அவசரமாக ஓடியதில் காலில் ஒரு 'மளுக்'. ஜெயந்தி, உன்னைப் போலவே அடிக்கடி விபத்துகளைச் சந்திக்கும் ஒரு துணை இருக்கிறது. இதற்கு முன்பு ஒரு முறை பட்டிமன்ற மேடையிலிருந்து விழுந்து விழாவிற்குத் தலைமைத் தாங்க வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினரே அலறி அடித்துக் கொண்டு எங்கள் இருக்கைக்கே தேடிவந்து பரிசுகளைக் கொடுத்து விட்டுச் சென்றார். நல்லவேளை! இந்த அரியக் காட்சியை வீடியோவில் பதிவு செய்யாமல் விட்ட என் துணைவர் திரு ரமேஷை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். இல்லையென்றால்ஒரு பிரபலத் தலைவர் கைது செய்யப் பட்ட விடியோக் காட்சியைப் போல் நூறு முறையாவது அதை திருப்பிதிருப்பிப் போட்டுப் பார்த்து "அம்மா நீ ஒரு தடவை விழுந்தால் நூறு தடவை விழுந்தமாதிரி" என்று என்னை புல்லரிக்க வைக்கும் நான் பெற்றச் செல்வங்கள்!
தமிழ் வாழ்த்துடன் நிகழ்ச்சித் துவங்கியது. அதிலும் ஒரு புதுமை! திரு.குணா அமலதாசனின் பாடல் ஒன்றையேத் தேர்ந்தெடுத்து இசையமைத்துப் பாடினார். இந்த இசை வட்டை வாங்கிவைத்துக் கொள்ள வேண்டும் என்றுயோ சித்து கொண்டேன். இதற்கும் ஒரு பின்புலம் இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் தமிழ் வாழ்த்துப் பாட ஆள் தேட வேண்டியிருக்கும். அதிலும் 'தமிழுக்கும்அமுதென்றுப் பேர்' பாரதிதாசன் பாடலைப் பாட சுசீலாவை விட்டால் வேறுயாரும் பாட முடியாது என்று தீவிரமாக நினைத்துக் கொண்டிருக்கும் என்னைவேறு அவ்வப்போது என்ன சித்ரா தமிழ் வாழ்த்து நீங்களேபாடிடறீங்களா? என்றுஎன்னிடம் கேட்டு என் அதிர்ச்சியை ரசித்து விட்டுசரி நீங்களே அதுக்கு ஒரு ஆள் ஏற்பாடு செஞ்சிடுங்க என்று நான் ஆள்பிடிப்பதற்கு அலையும் கதை எனக்குத் தான் தெரியும்! அதனால் குடும்பப் பாடல்மாதிரி எங்க எழுத்தாளர் கழகக்குடும்பப் பாடலாக இதையேத் தேர்வு செய்தால் என்ன என்றுயோசித்துக் கொண்டிருந்தேன்.
வரவேற்புரையை திருஆண்டியப்பன் சுருக்கமாகமுடித்துக் கொண்டார். தலைமையுரையை வழங்க விழாத் தலைவர்ப் பற்றித் துணைத் தலைவர் திருதுரைமாணிக்கம் வந்தார்.தமிழாசிரியர்ஆயிற்றே! பேச்சு வெகு சுவையாகவே இருந்தது. பிறகு வாழ்த்துரை வந்த தமிழ்த் தொண்டர் திருதங்கராசு அன்றைய நூல் வெளியீட்டு விழாவின்புதுமையைப் பற்றிக் கூறினார். புத்தகம் வாங்குபவர்கள் அனைவரின் பெயரும்குலுக்கலில் சேர்த்துக் கொள்ளப்பட்டு குலுக்கலில் வெற்றிஅடைபவர் சஹாரா விமானச் சேவை நிறுவனத்தார் வழங்கும் டெல்லிக்குச் சென்றுவரஇரு விமானப் பயணச் சீட்டுகள்பெறலாம்.
ஆஹா! என் பெயரையும் சேர்க்கலாமேஎன்று விண்ணப்பத் தாளைத் தேடினேன். நாம் இந்த மாதிரி போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடாது. இது பொது மக்களுக்கு மட்டும் தான்!என்று செயளாலர்அறிவுறுத்தினார். அடச்சீ இந்தப் பழம்புளிக்கும்! நான் பார்க்காத டெல்லியா?
வாழ்த்தும் நெஞ்சங்களின் வாழ்த்துக்கள் தொடர்ந்தன. அனைவருமே கொடுக்கப் பட்ட நேரக்கட்டுப் பாட்டிற்குள் பேசுவார்கள் என்று எதிர்பார்ப்பது கடினம் தான் என்றாலும் கூடிய மட்டும் சுருக்கமாகப் பேசினால் மற்றவர்கள் பேசுவதற்கும் நேரமிருக்கும். ந்தக் கருத்தை எத்தனை முறை சொன்னாலும் பேசும் போது உணர்ச்சவசப் பட்டுபேசிக் கொண்டேப் போனால் தடுக்கத் தெரியாமல் வேடிக்கைப் பார்ப்பதைத் தவிரவேறு வழியில்லை தான்.சிறப்பு விருந்தினர் உரையில் திரு தர்மன் சண்முகரத்தினம் தாய்மொழிக் கற்பித்தலில் ஏற்படுத்திய புதுமைகளையும் மாற்றங்களையும் குறிப்பிட்டார். அடுத்த தலை முறையினருக்கு நம்மொழியை கொண்டு செல்லும் போது அதை அவர்களுக்கு எவ்வளவுசுவாரஸ்யமாக்குகிறோம் என்பது முக்கியம். இதைப் போன்ற நூல்களால் தமிழ்கற்கும் மாணவர்களுக்கு நம் மொழியின் நுண்மையும் நம் கலாச்சாரமும் எடுத்துரைக்கப் படுகிறது.
நூலின் முதல் பிரதியை திருநிர்மலன் பிள்ளைப் பெற்றுக்கொண்டார். பிறகு ஒரு பெயர் சொல்லாப் புரவலர் சிங்கப்பூரில் இருக்கும் 12தொடக்கக் கலூரிகளுக்கும் பத்துபிரதிகள் வாங்கி இலவசமாகக் கொடுத்தார். விழாவிற்கு வந்திருந்த அனைவரும் அமைச்சர் கையால் புத்தகம்வாங்கிச் சென்றனர்.
திருஅமலதாசன் மேல் அனைவரும் வைத்திருந்த மதிப்பும்பாசமும் அதில் தெரிந்தது.தலைவர் ஏற்கெனவேஉணர்ச்சிப் பிழம்பு! அவர்ஏற்புரையில் இன்னும் அதிகமாக உணர்ச்சிவசப் பட்டுக் கண்கலங்கி நம்மை நெகிழ வைத்தார். அவர் நன்றி கூறாமல் யாரையாவது விட்டுருந்தால் அவர்கள் ஏன் தன் பெயரை விட்டுவிட்டார் என்று தவறாகவேநினைக்க வேண்டாம். அந்த அளவிற்கு முடிந்தவரை அனைவரையும் நினைவுப் படுத்தி அவர்கள் தனக்குச் செய்த உதவிகளைப் பட்டியலிட்டார். மலேசியாவிலிருந்து வந்திருந்த கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி. இரா.மதிவாணன், ஜிஜிஎஸ் புத்தகக்கடை உரிமையாளர் திருவெ ராமசாமி போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
சிறப்புரை ஆற்ற வந்த குமரி அனந்தனிடம் உங்களுக்குச் சிறப்புச் செய்ய வேண்டும் மேடைக்கு நடுவில் வாருங்கள்என்று அழைத்தால் இதெல்லாம் என்ன சிறப்பு இந்த மேடையில் நான் பேசுவதுதான் சிறப்பு என்று மறுத்தார். இருந்தாலும் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து நினைவுப் பரிசு கொடுத்ததும் அவர் முகத்தில் ஒரு சின்னப் புன்னைகை! வரும் விருந்தினருக்கு இதைப் போல ஏதாவது செய்யலாம் என்று சமீபத்தில் நம் இலக்கியக் குடும்பத்தில் பேச்சு நடந்தது நினைவிருக்கலாம். பெறுவதில்ஒரு இன்பம் என்றால் கொடுப்பதிலும் ஒரு இன்பம் இருக்கிறது. கொஞ்சம் கர்ணன் வாடை அடித்தாலும் வேறு யாராவது அடிக்க வந்தாலும் என்னுடைய ஆலோசனை ஏதாவது கொடுக்கலாம் என்பது தான். ஆனால் இதனால் எழும் நிர்வாகப் பிரச்சனைகள் காரணமாக இந்த ஆலோசனையை சற்று ஒத்தி போட்டுள்ளேன். நம் குழு இன்னும் விரிவடைந்து பெரிதானால் இதைப் போன்ற யோசனைகள் நிறைவேற்றப் படலாம். கடல் பொங்குவதற்கும் இலக்கியச் செல்வர் பேசுவதற்கும் யார் குறிப்பெழுத முடியும்?
நன்றி நவிலலோடு விழாமுடிந்தது. டெல்லிச் செல்லபயணச் சீட்டு பெற்றவர்கள் வெயிலில் சென்று வறுபடாமல் நிழலாக நடந்து புதுதில்லியின் சமாதிகளையும், செங் கோட்டையைப் பார்த்து பெருமூச்செரிந்து, அஜ்மல்கான் சாலை ஆடைகளையும் வாங்கி வரவாழ்த்துக்கள்!