எழுத்தாளர் பிரபஞ்சன் சிங்கப்பூர் வருகிறார்

தமிழகத்திலும், அதற்கு அப்பாலும், புலம் பெயர்ந்த தமிழர் வாழும் தேசங்களிலும் நன்கு அறியப்படும் மென்மையான எழுத்துகளுக்குச் சொந்தக்காரர் பிரபஞ்சன்.
அவர் - வாசிப்போம் சிங்கப்பூர் 2007 இயக்க ஏற்பாட்டில் சிங்கப்பூரில் நடக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்.
பிரபஞசனோடு நடக்கும் கலந்துரையாடல்கள் "சந்தியா" நாவலை பிரதானப்படுத்தி அமையுமெனிலும், அதையும் தாண்டி சமூகம், மொழி, இலக்கியம் என பல தளங்களிலும் கலந்துரையாடல் விரிவடையும் என எதிர்பார்க்கலாம்.
துடிப்பான, தமிழின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கைமிக்கதொரு இளையதலைமுறையை உருவாக்குவதில் சிங்கப்பூரின் பல்வேறு அமைப்புகளும் கைகோர்த்திருக்கும் ஒரு சூழலில் அனுபவமிக்க இந்த எழுத்தாளரின் சிங்கப்பூர் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
ஜுரோங் வெஸ்ட் சமூக நூலகத்திலும், அங் மோ கியோ சமூக நூலகத்திலும் நடைபெறும் கலந்துரையாடல் சுவையாகவும், பயனுள்ளதாகவும் அமையும் வகையில் ஏராளமான வாசகர்களும் தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
0 à®à®°à¯à®¤à¯à®¤à¯à®à¯à®à®³à¯:
Post a Comment
<< Home