Wednesday, July 05, 2006

06/Jul/06 - லீனா மணிமேகலையின் குறும்படங்களும், சந்திப்பும்...

லீனா மணிமேகலை - 'கனவுப்பட்டறை'க்கு சொந்தக்காரர்.

மாத்தம்மா, பறை, பலிபீடம் போன்ற சிறந்த குறும்படங்களின் இயக்குநர்.

தமிழ்ச் சமூகத்தில் தொடர்ந்து நெறிக்கப்பட்டு வரும் ஒடுக்கப்பட்டோரின்
குரலை வெளிக் கொணர்வதில் போராடிக் கொண்டிருக்கும் ஒரு போராளி!

'ஒற்றையிலையென...' தந்த கவிஞர்.

தனது சில கவிதைகளை ஒளிஓவியமாக வடித்தவர்.

சிறந்த தொலைக்காட்சி படைப்பாளர்.

உலகசினிமாவை தமிழுக்கு, தமிழருக்கு அறிமுகப்படுத்த 'திரை' என்ற உலகசினிமா
மாதஇதழை அச்சிலும், இணையத்திலும் கொண்டுவருபவர்.

பதிப்புத்துறையில் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் படைப்பாக 'உலக சினிமா -
அறிமுகம்' நூலையும், குழந்தைகளுக்கான சிறந்த படைப்பாக 'ஆலிஸின் அற்புத
உலகம்' உள்ளிட்ட மிகச்சிறந்த தமிழ் மற்றும் மொழிபெயர்ப்பு நூல்களை பல
சிறந்த படைப்புக்களை தனது கனவுப்பட்டரை மூலம் புத்தகங்களாக
கொண்டுவருபவர்.

விளம்பரம் மற்றும் இணையத்துறையையும் விட்டு வைக்காதவர்!

உலகின் பல நாடுகளில் உள்ள தமிழர்களை தனது குறும்படங்களின் மூலம்
கவர்ந்தவர். பல அங்கீகாரங்களை பெற்றவர்.

சிங்கை நண்பர்களுக்காக, லீனாவின் சில குறும்படங்களை பார்க்கும்
வாய்ப்பும், அவருடனான கலந்துரையாடலுக்கும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

நாள்: 06-ஜீலை-2006, வியாழன்
நேரம்: மாலை 06:30 முதல் 08:30 வரை
இடம்: சிங்கை - அங் மோ கியோ நூலகம், இரண்டாம் தளம்.

அனைவரும் வருக!

இந்த நிகழ்வை ஒருங்கிணைக்க உதவிவரும் நண்பர் ஈழநாதன், தொடர்ந்து பல
நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் சிங்கை நூலக நிர்வாகம், தகவல் வெளியிட்ட
தமிழ்முரசு, விழாநாயகி லீனா மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

தொடர்புள்ள சில சுட்டிகள்:
கனவுப்பட்டறை: www.kanavuppattarai.com
திரை: www.thirainet.com

மேலும் ஒரு குரல்:

லீனா மணிமேகலையின் 'பலிபீடம்'
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்: