Thursday, April 14, 2005

செல்பேசிக்கான உலகின் முதல் தமிழ் மின்நூல் - *இன்று*

(Worlds first Tamil eBook for mobile phones)

"இந்தமாதிரி பெரிய ஸ்டேட்மெண்ட அசாட்டா உடுறியே வேற யாராச்சும் முன்னாடியே செஞ்சிருந்தா?" அப்டீன்னு மனசாட்சி கேக்குது சாமி.
"இப்புடி ஏதாச்சும் குண்டைத்தூக்கிப் போட்டாதான் அப்புடி ஏதாச்சும் சைலண்டா நடந்திருந்தா வெளிய வரும், பின்னூட்டம் என்னாத்துக்கு இருக்கு?", அப்டீன்ன்னு சமாதானம் சொல்லிகிட்டே இதை எளுதுறேன்.

நம்ம சமாச்சாரத்துக்கு வர்றதுக்கு முந்தி நம்ம தமிழ் எப்படி எப்படியெல்லாம் செல்லுல புகுத்தப்பட்டதுன்னு ஒரு மலரும் நினைவுகள் பாத்துரலாமா?

கருப்பு வெள்ளையா (செல்போனோட ஸ்கிரின்) இருந்த காலத்துலயே ஆரம்பிச்சாச்சு சாமி. மொபைல்ல தமிழ் எழுத்தெல்லாம் கொண்டுவரணும்னா தயாரிப்புலயே கொண்டுவந்தாத்தான் சுலபம் ஆனா அதுக்கு மார்கெட் டிமாண்டு வேணுமே. அப்பல்லாம் மொபைல் சாட்டுவேருக்கு போன் அவ்வளவு இடங்கொடுக்கலை. அதனாலே SMSல பிக்சர் எஸ்.எம்.எஸ்ஸா தமிழை அனுப்ப ஆரம்பிச்சோம். பழைய லொட்டை லொசுக்கு போன்லையும் வேலை செய்ற டெக்னிக்க்குங்கிறதால இப்பவும் அது தொடர்ந்துகிட்டுத்தான் இருக்கு. (உங்களுக்கும் ஆராச்சும் புத்தாண்டு வாழ்த்து அனுப்பி இருப்பாங்களே!)

நம்ப முத்து நெடுமாறன் கூட இந்த வேலையை சுளுவா செய்யறமாதிரி ஒரு ஸாப்டுவேர் பண்ணி முரசு அஞ்சல் கூடவே குடுத்தாரு. சேதியை கம்பூட்டருல எய்திக்க வேண்டியது. இன்பிரா ரெட் வழியா உங்க போனுக்கு அன்ப்ச்சு அப்டியே அனுப்பவேண்டியவுங்களுக்கு அனுப்பிடும். இந்த எஸ்.எம்.எஸ்ஸை வாங்குற போன் அரதப்பழசா இருந்தாலும் ஓக்கே, ஆனா அனுப்புற போன் கொஞ்சமாச்சும் நல்லதா இருக்கோணும்.

இடையில இன்னோரு விசியம் சொல்லோணும், இந்த லேப்டாப்பை தூக்கி தூக்கி அலுத்த ஆளுங்க கைக்கு அடக்கமா, கம்ப்யூட்டர்ல பாக்குற சில இம்ப்பார்டண்ட் வேலைங்களை செஞ்சுக்குற மாதிரி எதுனா கிடைச்சா நல்லாருக்குமேன்னு பாம்டாப்பை வாங்குணாங்க. அவ்ளோ ஏன் என்னோட பார்ட்னர் கூட பாக்கெட் பீஸீ ஒண்ணு வாங்குணாரு, நல்லா வசதியாத்தாங்க இருந்திச்சு அது. நாங்க கூட தமிழ்ல எளுத, சாட் பண்ண சாப்டுவேர் எளுதி போட்டு பாத்து சந்தோசப் பட்டேன். அது கைக்கு அடக்கமா இருந்த அளவு பாக்கெட்டுக்கு அடக்கமா இல்லை. ரெண்டு மாசங் களிச்சுப்பாத்தா அதை அவரு யூஸ் பண்ற மாதிரியே தெரியலை. என்னான்னு கேட்டா எப்பவும் செல்போன் அதோட சார்ஜர்ன்னு தூக்கிட்டு அலையறோம் இதுல கூட பாக்கெட் பீசி அதோட சார்ஜர்ன்னு சுமக்கப் பிடிக்கலைன்னு எடுத்து ஓரமா வைச்சுட்டாராம் (சும்மா இருந்தா அதை எனக்கு குடுக்க சொல்லுன்னுதானே சாமி மொனகுனீங்கொ, முடிஞ்சா நானே வாங்கியிருக்க மாட்டேனா சாமி).

ஆனா இப்ப பாருங்க பாக்கெட் பீஸி செய்யுற முக்கால் வாசி வேலையை லேட்டஸ்ட் செல் போனே செய்யுது. கைக்கு அடக்கமா என்னேரமும் கூடவே பயணஞ்செய்யுதே! கம்ப்யூட்டர் மாதிரி சாப்டுவேர் இயங்க வழி விட்டதும் செல்போன்ல பிரச்சனைங்களும் வராம இல்லை. கம்ப்யூட்டர் மாதிரி இதுங்களையும் வைரஸ் புடிக்குதாம். இந்த ஜாவா எல்லாம் செல்போன் சப்போர்ட் பண்ண ஆரம்பிச்ச பின்னாடி தமிழை புகுத்த ஆராச்சி தொடர்ந்தது. இதுலியும் முந்திகிட்டாரு நம்ம முத்து நெடுமாறன், ஜனவரி பதினஞ்சில இதே சிங்கப்பூர்ல தான் முதல் தமிழ் SMSஐ வெளியிட்டாரு.

நம்ம ஆளுங்க இணையத்துல எப்படியெல்லாம் எழுதி கலக்குறாங்க பாத்தீங்களா! பிரண்டு ஒருத்தரு யாரு என்னா எழுதுனான்னு வெரல் நுனிலெ வைச்சுருக்காரு. எப்படிங்க இவ்வளவு பிசியா இருந்தும் இப்படி அசத்துறீங்க, நேரம் எப்படி கிடைக்குதுன்னு கேட்டேன். அவரு சொன்னாரு,"ஆபீஸ்ல இருக்கும்போதே படிக்கவேண்டியதை அச்சடிச்சு வைச்சுக்குவேன், பஸ்ல எம்ஆர்டியில போகும் போது படிச்சு முடிச்சுடுறது." சரிதானுங்களே, அப்படி பண்ணாட்டி இந்த பரபரப்பான வாழ்க்கையில நேரம் எப்புடி கிடைக்கும்?

இதுதாஞ் சாமி என்னோட பாயிண்டடு. இப்ப வேண்டிய கதையை பிரிண்ட் எடுக்கறதுக்கு பதிலா உங்க செல்லுல இறக்கிக்கிட்டு போக வர படிச்சி முடிச்சிறவேண்டியது. நின்னுகிட்டு பயணம் போனாக்கூட படிக்கிறது ஈசி. இங்லீசுல இப்டி பண்றது ரொம்ப சுலபந்தாங்க ஆனாக்க தமிழ்ல என்ன பண்றது?

அதுக்குத்தாங்க ஒரு வழி கண்டுபுடுச்சிருக்கேன். ரொம்ப செல்பிஷ்ஷா மொதல் கதையா என்னோட ஒரு (மொதல்) கதையையும் எடுத்துகிட்டேங்க (ஏற்கனவே நம்ம சிங்கப்பூர் தோஸ்துங்க ஒரு முன்னோட்டம் பாத்தாங்க). அதைத்தான் இன்னிக்கு(ள்ள) வெளியிடப்போறேன். அதை எப்படி இறக்குறது, அது என்னென்ன மாடல் செல்போன்ல வேலை செய்யும் இப்படி எல்லா வெபரத்தோட என்னோட வலைப்பதிவுல எளுதப்போறேன்.

கொஞ்சமே கொஞ்ச நேரம் பொறுத்துக்கங்க!
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

Wednesday, April 13, 2005

செல்பேசி: நேற்று, இன்று, *நாளை*

சைக்கிள்ள போற ஒரு பால்காரன் புண்ணாக்கு வைன்னு சொல்றத்துக்கு செல்போனல பேசிட்டு பால் பாத்ரத்துல லொட்டுன்னு போடுவானே, அந்த விவேக் காமெடி ஞாபகம் இருக்கா?

நேத்து செல்போன் வைச்சுக்கிறது பந்தா, இன்னிக்கோ இந்தா இந்தான்னு கூவி கூவி வித்து வீட்டுல போன் வைச்சுக்காதவன் கூட செல்போன் வைச்சுக்க ஆரம்பிச்சாச்சு. அதோட ஆரம்ப கிளாமர் போயி இப்பல்லாம் நீங்க வேண்டாம்னாலும் வைச்சுக்க ராசான்னு ஆட்டுக் கழுத்துல மணிகட்றமாதிரி செல்போனை உங்க தலையில கட்டிடுவாங்க ஆபீஸ்ல. அடப்போய்யா! அது வந்ததுல இருந்து என் நிம்மதியே போச்சுன்னு சொல்றவங்க கூட அதைப்பிரிஞ்சு இருக்க முடியதில்லே. பொண்டாட்டி மாதிரி ஒரு ஹேட் & லவ் இருந்துகிட்டே இருக்கு. எங்க ஊர்ல பாருங்க பல்லு தேய்க்கத் தெரியாததெல்லாம் செல்லுங்கையுமா அலையுது. அப்பேர்ப்பட்ட செல்போனைப்பத்தித்தாங்க பேச வந்தேன்.

ஆரம்பத்துல பாருங்க! காலர் ஐடி சமாச்சாரமே பெரிய விசியமா இருந்துச்சு, குளிக்கையில பொண்டாட்டி போனெடுக்கப் போனா "ஏய்! மொதல்ல பேரப்பாத்து சொல்லு நான் சொன்னப்புறம் பதில் பேசலாம்",முன்னு உள்ள இருந்துகிட்டே கத்தவேண்டியது. அப்புறம் கொஞ்சம் விசிய ஞானம் வந்த பின்னாடி அறுவைக் கோஷ்டிக்கின்னே தனி ரிங்டோன். ஆபீஸ் நம்பருக்கு தனி ரிங்டோன் (உடம்பு சரியில்லாத மாதிரி சொந்த டோனுக்கு தயாராவ வேணாமா?)

கருப்புவெள்ளைன்னு குட்டியா ஸ்கிரீன் இருந்தப்ப அதுல பெருசா ஒன்னும் செய்ய முடியலை, ஆனா இப்ப பாருங்க போன்லியே கேமராவெல்லாம் வந்தாச்சு. அதனாலே DOS போயி Windows வந்தது டும் டும் டும்னு கம்ப்யூட்டருக்கு குதிச்ச மாதிரி செல்லுக்கும் குதிக்கவேண்டியதுதான். தாஸ் இருந்த காலத்துல சிலபேர் கைப்பிடியில இருந்த கம்ப்யூட்டர்(எப்ப, எதுக்கு, என்ன கமேண்டுன்னு ஞாபகம் இருந்தாத்தான் தம்பி வேலையே செய்ய முடியும்) இப்ப பல பேர் கைப்பிள்ளையா ஆனதுக்கு எல்லாத்துக்கும் பொம்மை போட்டதுதேன் காரணம். அப்பேன் ஆத்தா பேரைக்கூட எழுதிப்பாக்காத பயலுவ எல்லாம் அவசரம்னா சரியா ஒதுங்கரானே எப்பிடி? இன்கிலீசுலேயும், தமிழ்லெயும், இந்திலெயும் ஆண்கள் பெண்கள்னு தெளிவா எழுதி வைச்சுருக்கே அதனாலயா? இல்லை சாமி, படம் சாமி படம்.

இப்ப செல் போன் படங்காட்டுது சாமி, ஆமா! அதுல எடுத்த போட்டோவையே அவங்கவங்க பேருக்கு காண்டாக்ட்ஸ்ல குடுத்துட்டா போதும் அவங்க நம்ம நம்பர சொழட்டுனா நமக்கு அவங்க மொகம் காட்டி மணியடிக்கும். பத்தாக்கொறைக்கு அவங்களையே பேச சொல்லி அதையே ரிங்டோனா வைச்சுக்கலாம், சேம்புளுக்கு, "கண்ணா போனை எடுப்பா, டேய்! டேய்! டேஏஏய், அடச்சீ! எட்றா நாயே! எவ்ளோ நேரம் தூங்குவெ!"

நம்ம செல்லுக்கு தெரிஞ்ச மொகம் சிலது நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய மொகம்தான், ஏற்கனவே தெரிஞ்ச மொகமா இருந்தாலும் இருக்கலாம் எதுக்கும் பாத்துக்கங்க!

தெரிந்த முகங்கள்

"இதெல்லாம் சர்தான் நைனா, தலைப்புல நாளைக்கு மட்டும் ஸ்டார் போட்டுருக்கியே என்னா விசியம்?"ன்னு கேக்க நெனைக்கிறவுங்களுக்கு, ஆமாங்க விஷேசந்தான். அது என்னவா இருக்கும்னு உங்க யோசனையை கமெண்டா வைங்க என் பதிலை நான் தமிழ் புத்தாண்டுல சொல்றேன் (அட நாளைக்கு தாங்க!)
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்: