Sunday, January 01, 2006

சிங்கப்பூரில் "அலையில் பார்த்த முகம்" கவிதை நூல் வெளியீடு



அன்பு நண்பர்களே...

1983 முதல் 2005 வரை நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பாக "அலையில் பார்த்த முகம்" வெளிவருகிறது.

உதிரிகளாக இருந்த கவிதைகளை மாலையாக்கி இருக்கிறேன். நடந்து வந்த பாதைகளின் சுவடுகளாக நிறைகளோடும், நெருடல்களோடும், நிம்மதியோடும், ஒரு குழந்தையின் அப்பாவித்தனங்களோடும் கூட, இக்கவிதைகள் வடிந்து கிடப்பதைப் பார்க்கிறேன். வளர்ந்திருக்கிறோம் என்பதில் திருப்தியும், இன்னும் வளர எவ்வளவோ உயரமிருக்கிறதே என்ற உணர்வும் ஒரு சேர ஏற்படுகிறது.

உங்களோடு அந்த உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கும் ஒரு எத்தனிப்பே இந்த நூல் வெளியீட்டு விழா. நண்பர்களோடும், குடும்பத்தாரோடும் கலந்து கொள்ளுங்கள், காத்திருக்கிறேன்!

அன்புடன்

பாலு மணிமாறன்
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

19 கருத்துக்கள்:

கூறியவர்: Blogger மதுமிதா

புத்தாண்டு மகிழ்வுடன் இன்னுமொரு இனிய நிகழ்வு.
மனமார்ந்த வாழ்த்துகள் பாலு மணிமாறன்.
மாலை மணக்கட்டும்.
இங்கிருந்தே வாழ்த்தனுப்புகிறோம்.

January 01, 2006 12:28 PM  
கூறியவர்: Blogger ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)

அன்புள்ள பாலு மணிமாறன்,
வாழ்த்துக்கள்.
நூல் வெளியாவது குறித்து மிக்க மகிழ்ச்சி.
நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க
ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும்,
ஜெயந்தி சங்கர்

January 01, 2006 1:15 PM  
கூறியவர்: Blogger Boston Bala

வாழ்த்துகள்!

January 01, 2006 3:32 PM  
கூறியவர்: Blogger சிங். செயகுமார்.

சந்தோஷம் ,வாழ்த்துக்கள் நண்பரே! நிச்சயம் நானும் விழாவில் கலந்து கொள்வேன்.

January 01, 2006 3:59 PM  
கூறியவர்: Blogger இப்னு ஹம்துன்

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா

January 01, 2006 4:44 PM  
கூறியவர்: Blogger விருபா - Viruba

அன்புள்ள பாலு மணிமாறன்,

தமிழில் வெளியாகிய, மற்றும் வெளியாகும் புத்தகங்களின் தகவல்களை, வாசகர்கள் ஒரே இடத்தில் அறிந்து கொள்வதற்காக ஒர் தகவல் தளத்தை நிறுவியுள்ளோம்.

இத்தளம் மூலம் உங்களின் புத்த வெளியீட்டு விழா பற்றிய தகவல்களை நீங்களாகவே பதிவு செய்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து தமிழ் எழுத்தாளர்களையும் எமது தளத்தை பயன்படுத்தி,உங்கள் ஆக்கங்கள் உலகெங்கும் அறிந்திட அன்புடன் அழைக்கிறோம்.

January 01, 2006 11:00 PM  
கூறியவர்: Blogger பாலு மணிமாறன்

அன்பு நண்பர்கள் அத்தனை பேருக்கும் நன்றி, நன்றி & நன்றி!!!!

January 02, 2006 1:40 AM  
கூறியவர்: Blogger எம்.கே.குமார்

அன்பின் பாலு மணிமாறன்,

மனமார்ந்த வாழ்த்துகள்.

கலந்துகொள்ள முயல்கிறேன்.

நன்றி.
எம்.கே.

January 02, 2006 9:26 PM  
கூறியவர்: Blogger பாலு மணிமாறன்

Nandri Kumar... hope you can find some time to attend the function.!

January 03, 2006 7:22 AM  
கூறியவர்: Blogger b

மென்மேலும் எழுத வாழ்த்துக்கள் நண்பரே.

January 03, 2006 8:32 AM  
கூறியவர்: Blogger குழலி / Kuzhali

வாழ்த்துகள் பாலு மணிமாறன் மேன்மேலும் எழுதி சிறப்புற வாழ்த்துகிக்றேன்....

நூல் வெளியீட்டில் சந்திப்போம்...

January 03, 2006 1:30 PM  
கூறியவர்: Blogger ramachandranusha(உஷா)

வாழ்த்துக்கள் பாலுமணிமாறன். விரைவில் புத்தக விமர்சனத்தைப் படித்தவர்கள் எழுதுவார்கள் என்று நம்புகிறேன்.

கவிஞரே, அப்படியே சில கவிதைகளையாவது இங்கு போடுங்களேன்.

January 03, 2006 1:46 PM  
கூறியவர்: Blogger பாலு மணிமாறன்

Nandringa Usha. I am expecting to see you on function day Dear Moorthy & Kuzhali !!

January 04, 2006 5:29 AM  
கூறியவர்: Blogger ஜோ/Joe

வாழ்த்துக்கள்!
விழாவில் சந்திப்போம்.

January 04, 2006 1:14 PM  
கூறியவர்: Blogger அன்பு

வாழ்த்துக்கள் பாலு...

உங்களின் பல படைப்புக்களை 'தமிழ்முரசு' நாளிதழிலும், உங்கள் வலைப்பதிவிலும் வாசிக்கும்போதெல்லாம் இதுபோன்ற அழைப்பிதழுக்காக காத்திருந்தேன்... ஒருவழியாக இப்போதாவது அழைப்பிதழ் அனுப்பியமைக்கு மிக்க நன்றி!

உங்கள் தன்னடக்கமான சுயபார்வையே உங்கள் நூலை வாசிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. விழாவில் சந்திப்போம்.

January 04, 2006 5:57 PM  
கூறியவர்: Blogger அன்பு

>>>கவிஞரே, அப்படியே சில கவிதைகளையாவது இங்கு போடுங்களேன்.

உஷா மற்றும் நண்பர்களுக்கு...

பாலு மணிமாறன் அவர்களின் சில கவிதைகளை அவருடைய வலைப்பதிவில் வாசிக்கலாம்.

January 04, 2006 6:12 PM  
கூறியவர்: Blogger Ramya Nageswaran

ரொம்ப சந்தோஷம் பாலு..வாழ்த்துகள். விழாவில் கலந்து கொள்ள எல்லா முயற்சியும் செய்கிறேன்.

January 04, 2006 7:34 PM  
கூறியவர்: Blogger பாலு மணிமாறன்

Nandri Anbu, Ramya, Joe... Hope you all can find some time to attend the function!!!!!!!!!

January 05, 2006 11:14 PM  
கூறியவர்: Blogger Unknown

வாழ்த்துக்கள் பாலு மணிமாறன்!
- Mohan, Coimbatore

November 07, 2006 12:20 AM  

Post a Comment

<< Home