Wednesday, April 13, 2005

செல்பேசி: நேற்று, இன்று, *நாளை*

சைக்கிள்ள போற ஒரு பால்காரன் புண்ணாக்கு வைன்னு சொல்றத்துக்கு செல்போனல பேசிட்டு பால் பாத்ரத்துல லொட்டுன்னு போடுவானே, அந்த விவேக் காமெடி ஞாபகம் இருக்கா?

நேத்து செல்போன் வைச்சுக்கிறது பந்தா, இன்னிக்கோ இந்தா இந்தான்னு கூவி கூவி வித்து வீட்டுல போன் வைச்சுக்காதவன் கூட செல்போன் வைச்சுக்க ஆரம்பிச்சாச்சு. அதோட ஆரம்ப கிளாமர் போயி இப்பல்லாம் நீங்க வேண்டாம்னாலும் வைச்சுக்க ராசான்னு ஆட்டுக் கழுத்துல மணிகட்றமாதிரி செல்போனை உங்க தலையில கட்டிடுவாங்க ஆபீஸ்ல. அடப்போய்யா! அது வந்ததுல இருந்து என் நிம்மதியே போச்சுன்னு சொல்றவங்க கூட அதைப்பிரிஞ்சு இருக்க முடியதில்லே. பொண்டாட்டி மாதிரி ஒரு ஹேட் & லவ் இருந்துகிட்டே இருக்கு. எங்க ஊர்ல பாருங்க பல்லு தேய்க்கத் தெரியாததெல்லாம் செல்லுங்கையுமா அலையுது. அப்பேர்ப்பட்ட செல்போனைப்பத்தித்தாங்க பேச வந்தேன்.

ஆரம்பத்துல பாருங்க! காலர் ஐடி சமாச்சாரமே பெரிய விசியமா இருந்துச்சு, குளிக்கையில பொண்டாட்டி போனெடுக்கப் போனா "ஏய்! மொதல்ல பேரப்பாத்து சொல்லு நான் சொன்னப்புறம் பதில் பேசலாம்",முன்னு உள்ள இருந்துகிட்டே கத்தவேண்டியது. அப்புறம் கொஞ்சம் விசிய ஞானம் வந்த பின்னாடி அறுவைக் கோஷ்டிக்கின்னே தனி ரிங்டோன். ஆபீஸ் நம்பருக்கு தனி ரிங்டோன் (உடம்பு சரியில்லாத மாதிரி சொந்த டோனுக்கு தயாராவ வேணாமா?)

கருப்புவெள்ளைன்னு குட்டியா ஸ்கிரீன் இருந்தப்ப அதுல பெருசா ஒன்னும் செய்ய முடியலை, ஆனா இப்ப பாருங்க போன்லியே கேமராவெல்லாம் வந்தாச்சு. அதனாலே DOS போயி Windows வந்தது டும் டும் டும்னு கம்ப்யூட்டருக்கு குதிச்ச மாதிரி செல்லுக்கும் குதிக்கவேண்டியதுதான். தாஸ் இருந்த காலத்துல சிலபேர் கைப்பிடியில இருந்த கம்ப்யூட்டர்(எப்ப, எதுக்கு, என்ன கமேண்டுன்னு ஞாபகம் இருந்தாத்தான் தம்பி வேலையே செய்ய முடியும்) இப்ப பல பேர் கைப்பிள்ளையா ஆனதுக்கு எல்லாத்துக்கும் பொம்மை போட்டதுதேன் காரணம். அப்பேன் ஆத்தா பேரைக்கூட எழுதிப்பாக்காத பயலுவ எல்லாம் அவசரம்னா சரியா ஒதுங்கரானே எப்பிடி? இன்கிலீசுலேயும், தமிழ்லெயும், இந்திலெயும் ஆண்கள் பெண்கள்னு தெளிவா எழுதி வைச்சுருக்கே அதனாலயா? இல்லை சாமி, படம் சாமி படம்.

இப்ப செல் போன் படங்காட்டுது சாமி, ஆமா! அதுல எடுத்த போட்டோவையே அவங்கவங்க பேருக்கு காண்டாக்ட்ஸ்ல குடுத்துட்டா போதும் அவங்க நம்ம நம்பர சொழட்டுனா நமக்கு அவங்க மொகம் காட்டி மணியடிக்கும். பத்தாக்கொறைக்கு அவங்களையே பேச சொல்லி அதையே ரிங்டோனா வைச்சுக்கலாம், சேம்புளுக்கு, "கண்ணா போனை எடுப்பா, டேய்! டேய்! டேஏஏய், அடச்சீ! எட்றா நாயே! எவ்ளோ நேரம் தூங்குவெ!"

நம்ம செல்லுக்கு தெரிஞ்ச மொகம் சிலது நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய மொகம்தான், ஏற்கனவே தெரிஞ்ச மொகமா இருந்தாலும் இருக்கலாம் எதுக்கும் பாத்துக்கங்க!

தெரிந்த முகங்கள்

"இதெல்லாம் சர்தான் நைனா, தலைப்புல நாளைக்கு மட்டும் ஸ்டார் போட்டுருக்கியே என்னா விசியம்?"ன்னு கேக்க நெனைக்கிறவுங்களுக்கு, ஆமாங்க விஷேசந்தான். அது என்னவா இருக்கும்னு உங்க யோசனையை கமெண்டா வைங்க என் பதிலை நான் தமிழ் புத்தாண்டுல சொல்றேன் (அட நாளைக்கு தாங்க!)
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

9 கருத்துக்கள்:

கூறியவர்: Blogger Vijayakumar

அருமையா வந்திருக்கு அருள் கட்டுரை. தொடரை கண்டிப்பா கொடுங்க. மரத்தடியிலே உங்க பயணகட்டுரையை படிச்சேன். நல்லாயிருந்திச்சி. திடீர்ன்னு தொடரும்னு அடுத்த பகுதியை காணோம். அந்த மாதிரி ஏதும் இங்கே பண்ணிறாதீங்க.

April 14, 2005 9:01 AM  
கூறியவர்: Blogger Kasi Arumugam

அருள், என்ன அது சொல்லுங்க சீக்கிரமா...

April 14, 2005 9:41 AM  
கூறியவர்: Blogger அன்பு

அண்ணே... நாளைக்கு - இன்னிக்கு ஆயிடுச்சு, சீக்கிரம் சொல்லுங்கோ:)

April 14, 2005 10:34 AM  
கூறியவர்: Blogger Arul

சொல்லீடறேன், சீக்கிறமே சொல்லிடறேன். அதுக்குத்தான் ஏற்பாடு நடந்துகிட்டுருக்கு :)

April 14, 2005 10:42 AM  
கூறியவர்: Blogger Salahuddin

சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் நிறுவனத்திற்கு வந்திருந்த ஒரு வெளி நாட்டு மேலாளர், ஒரு வார செய்திதாள் விளம்பரங்களை பார்த்துவிட்டு கேட்டார், "இந்த ஊர் கடைகள்ல கைத்தொலைபேசி தவிர வேறு ஏதாவது விக்கிறாங்களா?"

- சலாஹுத்தீன்

April 14, 2005 11:11 AM  
கூறியவர்: Blogger ஈழநாதன்(Eelanathan)

அருள் நன்றாக இருக்கிறது கட்டுரை அடுத்தபகுதியை எதிர்பார்க்கிறேன்

April 14, 2005 12:23 PM  
கூறியவர்: Blogger Arul

இதுல சொல்லாம விட்டுப்போனதை சொல்லீடறேன்.
என்னுடைய பழைய செல்லோட சத்தம் கேட்டா என் பையன் எவ்வளவு ஆழமான தூக்கமா இருந்தாலும் எழுந்துடுவான். அரைத்தூக்கத்துல எழுந்தா அவன் செல்லை விட அதிகமா அலறுவான் ஆப் பண்ண முடியாது.

அதே நேரம் டிவீ சத்தமெல்லாம் அவனை ஒண்ணும் பண்ணாது. இப்ப புது செல்லுல இருந்து வர்ற மென்மையான இசை அவனை எழுப்பறதில்லை. எங்களுக்கும் நிம்மதி

சின்னப்பசங்க இருக்கிற வீட்டுல எல்லாரும் இதை அனுபவிச்சிருப்பீங்களே!

April 14, 2005 12:54 PM  
கூறியவர்: Blogger க்ருபா

நல்ல கட்டுரையோட அப்படியே எல்லார் படமும் போட்டுட்டீங்களா! சூப்பர். சூப்பர். அப்பாடி, ஈழநாதனோட படம் ஒரு வழியா பாத்தாச்!

அப்பறம், தமிழ்மணம் திரட்டும் பதிவுகளை செல்பேசியில் பார்க்க (தங்க்லீஷ்ல தெரியும்): http://www4.brinkster.com/shankarkrupa/blog/rsscell.asp

ஆமாம், சிங்கப்பூர்ல கைத்தொலைபேசியில் இணையப்பயன்பாடு எல்லாம் எப்படி இருக்கு? சென்னைல Hutch தெய்வம் மாதிரி இருக்கு. :-))

சு. க்ருபா ஷங்கர்

April 18, 2005 5:55 AM  
கூறியவர்: Blogger க்ருபா

ஏன் அந்த URl சரியா தெரியலைன்னு தெரியலை.

நல்ல கட்டுரையோட அப்படியே எல்லார் படமும் போட்டுட்டீங்களா! சூப்பர். சூப்பர். அப்பாடி, ஈழநாதனோட படம் ஒரு வழியா பாத்தாச்!

http://www4.brinkster.com/shankarkrupa/blog/rsscell.asp

April 18, 2005 5:56 AM  

Post a Comment

<< Home