தமிழ் இசைக்காக சிங்கப்பூர் வரும் மருத்துவர் இராமதாசு
மருத்துவர் இராமதாசு அவர்கள் தமிழிசைக்காக சிங்கப்பூர் வருகின்றார்.
இது தொடர்பாக நேற்றைய தமிழ்முரசுவின் செய்தி
தமிழ் இசையை மேம்படுத்த சிங்கப்பூர் வரும் டாக்டர் ராமதாஸ்
தமிழக பாட்டாளிக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது கட்சியைச் சேர்ந்த 15 எம்எல்ஏ-களுடன் சிங்கப்பூர் வருகிறார்.ஆனால் அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையில் அவரது பயணம் அமைய வில்லை. இந்தியாவில் செயல்படும் பொங்கு தமிழ் பண்ணிசை மணிமன்றத்தின் நிறுவனர் என்ற முறையில் அவரது சிங்கப்பூர் வருகை இடம்பெறுகிறது.
சிங்கப்பூரில் இம்மாதம் 25ம் தேதி திங்கட்கிழமை மாலை 6.00 மணிக்கு சிங்கப் பூர் காலாங் அரங்கில் நடைபெறும் பண் ணிசைப் பெருவிழாவில் திரு ராமதாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.தமிழகத்துக்கு வெளியே பொங்குதமிழ்ப் பண்ணிசை மணி மன்றத்தின் பண்ணிசை பெருவிழா வெளிநாட்டில் சிங்கப்பூரில் நடை பெறுவது இதுவே முதல் முறை.
நிகழ்ச்சியைப் பற்றி கருத்துரைத்த பிச்சினிக்காடு இளங்கோ, “தமிழ் இசையை முதன்மைப்படுத்துவதே நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். தொன்மைமிகு தமிழ் இசைதான் இன்றைய கர்நாடக இசைக்கு அடிப்படை” என்றார்.
தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம், திருவருட்பா போன்ற பாடல்கள் தமிழ் இசையில் பாடப்படும். கேட்போரை மயக்கும் காவடிச் சிந்து பாடல்கள் அன்றைய நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக இருக்கும். பாரதி, பாரதிதாசன் பாடல் களைத் திரைப்படப் பாடகி டி.கே. கலா பாடு கிறார். மக்கள் வாழ்க்கையோடு இணைந்த நாட்டுப்புறப் பாடல்களை வைகை பிரபா குழுவினர் பாடுகிறார்கள். வீரமாமுனிவர் பாடல்கள், குணங்குடி மஸ்தான் மெய்ஞானப் பாடல்கள் மூலம் திரு இராஜா முகம்மது மெய்மறக்கச் செய்வார். தமிழிசைக்கு முழுக்க முழுக்க தமிழ் இசைக் கருவிகள் பயன்படுத்தப்படும்.
இதுவரை சிங்கப்பூரில் நடைபெறாத புதுமையான இசை நிகழ்ச்சியாகவும் இந் நிகழ்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.
சிங்கப்பூரின் இன்டர்நேஷனல் மீடியா கன்சல்டன்சி என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் தமிழ் இசை நிகழ்ச்சியில் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பல பிரமுகர் கள் கலந்து கொள்கின்றனர் என்று அந்நிறு வனத்தின் நிகழ்ச்சி நிர்வாகி திரு டேவிட் மார்ட்டின் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச் சீட்டு களுக்கு இன்டர்நேஷனல் மீடியா கன்சல் டன்சி( 6377 1980), புளூ டைமண்ட் உணவகம், கோமள விலாஸ் அல்லது சங்கம் டெக்ஸ்டைல்சுடன் தொடர்பு கொள்ளலாம்.