Friday, September 30, 2005

நூல்கள் அறிமுக விழா...

நூல்கள் அறிமுக விழா
(வித்தியாசமான நூல் வெளியீட்டு விழா)

நூல்கள்:

காகித வாசம் - க து மு இக்பால்
(கவிதை)

விடியல் விளக்குகள் - மா அன்பழகன்
(சிறுகதை)

வீரமும் ஈரமும் - பிச்சினிக்காடு இளங்கோ
(நாடகம்)

திறனாய்வு:

முனைவர் மா சண்முக சிவா (மலேசியா)
வழக்கறிஞர் பாண்டித்துரை (மலேசியா)
முனைவர் சுப திண்ணப்பன் (சிங்கை)

நாள்:
1 அக்டோபர் 2005, சனிக்கிழமை, இரவு 7 மணி.

இடம்:
உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம்,
588சி, சிராங்கூன் சாலை, சிங்கப்பூர் 218226.

நிகழ்ச்சி நெறியாளர்:
எம் இலியாஸ்

நிகழ்ச்சி பற்றி வெளியிடப்பட்டிருக்கும் செய்தியில், விழா வித்தியாசமான முறையில் திட்டமிடப்பட்டிருப்பதாகவும், வரவேற்பு கிடையாது, தலைமை கிடையாது, நூல் வெளியீடு என்ற சடங்கு சம்பிரதாயம் கிடையாது. ஏற்புறை, நன்றியுரை என்று இப்படி எதுவும் கிடையாது. அது மட்டுமா? மாலை மரியாதை, பொன்னாடை அறவே கிடையாது. இப்படி ஒரு புதுமையான - வித்தியாசமான நூல் வெளியீட்டுவிழா அனுபவமாக இருக்கப்போகிறது.

காகித வாசம் - க து மு இக்பால்
(கவிதை)

காகித வாசம் கவிதைத்தொகுப்பில் பல்வேறு தலைப்புகளில் 73 கவிதைகள் உள்ளன. தொகுப்பில் மரபுக்கவிதை, புதுக்கவிதை இரண்டும் உண்டு. நூலிலிருந்து ஒரு கவிதை:

விளக்கு

இருளின் இன்னொரு முகம் நீ
அதனால்தான்
உன்னை
அனணைக்கும் போதெல்லாம்
இருள் எங்களை அணைக்கிறது

இருளைப் பற்றி உன்போல்
இவ்வளவு தெளிவாக
எவரும் விளக்க முடியாது.

விடியல் விளக்குகள் - மா அன்பழகன்
(சிறுகதை)

இந்தச் சிறுகதைத்தொகுப்பு வித்தியாசமாக அமைக்கபட்டுள்ளது. ஒவ்வொரு கதையையும் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். கதை ஆசிரியர் யார் என்று தெரியாமலேயே திறனாய்வாளர்கள் கதைகளை விமர்சனம் செய்ய ஏற்பாடு செய்து - அதை அப்படியே நூலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. கதைகள் பெரும்பாலும் சிங்கையை மையமாக வைத்து எழுதப்பட்டிருப்பதாகவும், படமாக எடுக்கக்கூடிய சிறப்புண்டு என்றும் தெரிகிறது.

வீரமும் ஈரமும் - பிச்சினிக்காடு இளங்கோ
(நாடகம்)

இந்த கவிதை நாடகம் சிங்கப்பூர் இளையர் மன்றத்தை வைத்து, முனைவர் ராஜேந்திரன் எழுதிய சிதறிய சித்தார்த்தன் நூல் வெளியீட்டு விழாவில் அறங்கேறிய நாடக்ம். வீரமும் ஈரமும் ஒரே இடத்தில் இருப்பதாக் காட்டும், வன்முறை கூடாது என்பதை வலியுறுத்தும் இந்த நூல் 72 பக்கங்களைக் கொண்டது. புகழேந்தியின் ஓவியங்கள் நாடகத்துக்கு சிறப்பு சேர்க்கின்றன. கல்கியின் சிவகாமியின் சபதத்தில் இடம் பெற்ற தளபதி பரஞ்சோதி திருத்தொண்டராக மாறுவதைக் காட்டுவதே இந்த வீரமும் ஈரமும் நாடகம்.

விழா வெற்றி பெற வாழ்த்துக்கள்!

(தகவல்களுக்கு நன்றி: தமிழ்முரசு - சிங்கையின் ஒரே தமிழ் நாளிதழ்)

என்றென்றும் அன்புடன்,
அன்பு

தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

1 கருத்துக்கள்:

கூறியவர்: Blogger nagoreismail

தகவல்களுக்கு நன்றி, விழா வெற்றி பெற வாழ்த்துக்கள் - நாகூர் இஸ்மாயில்

September 30, 2007 7:53 AM  

Post a Comment

<< Home