கலந்துரையாட அழைக்கிறோம்!
மலேசியாவின் முன்னணி எழுத்தாளரும் அறிவியல் புனைகதை ஆர்வலரும் ஆகிய டாக்டர் ரே.கார்த்திகேசு அவர்களின் சிங்கை வருகையை ஒட்டி இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேல் விபரங்களும் அழைப்பிதழும் கீழே
சிங்கப்பூர் கலை இலக்கிய நண்பர்களின் முரசம்
12 à®à®°à¯à®¤à¯à®¤à¯à®à¯à®à®³à¯:
ஜமாய்ங்க!!! வாழ்த்துக்கள்!!!
என்றும் அன்புடன்,
துளசி.
பி.கு: இவர் தானே 'புழுத்துளை'ன்ற கதை எழுதுனவர்?
ஆமாம் ஆமாம்
நல்ல விடயம்
சிங்கப்பூருக்கு நான் புதுமுகம். யாராவது ரே.கார்த்திகேசு பத்தி ஒரு சின்ன அறிமுகம் கொடுக்கமுடியுமா?
This comment has been removed by a blog administrator.
அவருடைய கதைகளுக்கு சில சுட்டிகள் தருகிறேன். படித்துப்பாருங்கள் :)
எதிர்காலம் என்று ஒன்று
ஆக்கலும் அழித்தலும்
புழுத்துளைகள் [1] [2] [3] [4]
மஹேஷ்வரியின் பிள்ளை
ஒரு சுமாரான கணவன்
வந்திட்டியா ராசு!?
நன்றி அருள்
அன்புக்குரிய விஜய்,
எனக்கும் பேரா. ரெ. கா-வைப் பற்றி அதிகம்தெரியாது - பல இடங்களில் அவருடைய
பெயரைக் கேள்விப்பட்டிருந்தாலும். எனக்கு அவருடைய எழுத்தைப்பற்றிய ஒரே
அறிமுகம், இதுதான்:
ஆனால் இதுவே - பதம் பார்க்க போதும்தானே!
===============
பயத்தோடும் மனப்படபடப்போடும்தான் தூக்கினேன். மெத்து மெத்தென்ற
கம்பளித்துணி சுற்றித்தான் கையில் தந்தார்கள். ' பாத்து..பாத்து'
என்றார் அம்மா. மங்கலான மருத்துவமனை விளக்கொளியில் மயங்கிக் கிடக்கும்
ராட்சசப் புழுப்போல அது நெளிந்தது. சரியாகப் பிடிக்காவிட்டால்
கையிலிருந்து பாதரசம் போல நழுவித் தரையில் கொட்டி சிதறிவிடும் போல
இருந்தது. எனது வலது உள்ளங்கையில் கம்பளிச் சுற்றையும் ஊடுருவி அதன்
உடலின் வெப்பம் வெது வெதுத்ததை உணர முடிந்தது
இமையிலும், கன்னங்களிலும் ரத்தம் ஓடுவது இளஞ்சிவப்புச் சாயம்
பூசினாற்ப்போல தெரிந்தது. உடலிலிருந்து பச்சை மண்ணிண் மணம். பனிக்குட
நீரின் எச்சங்கள் இன்னுமிருந்தன போலும். தலையின் ரோமங்களில் இன்னமும்
கூட பிசுபிசுப்பு. உதடுகள் விரிநது கொட்டாவி விட்டது ஓர் உலக அதிசயம்
போல நிகழ்ந்தது. எங்கள் அனைவரின் வாய்களும் பிளந்து மூடின.
யார் உருவாக்கினார்கள்.? நானா..? என்னால் எப்படி முடிந்திருக்கும்.?
களிமண்ணைப் பிடித்து ஒழுங்காக உருண்டையாக்கத் தெரியாத நானா..??
பென்சிலால் நேராக கோடு போடத் தெரியாத நானா..??
இவளா..? தலைமுடி கலைந்து சோர்ந்துபோய் எதையோ பெரிதாகச் சாதித்து விட்ட
ஆணவத்தில் கட்டிலில் சாய்ந்து புன்னகைத்துக் கொண்டிருக்கிறாளே இவளா..?
எப்படி.?இது என்ன சாம்பார் செய்வது போல ஒரு கலையா.? தனது வேலைத் தளத்தில்
கொம்ப்யூட்டரில் உட்கார்ந்து வண்ணவண்ணமாக க்ராஃபிக்ஸ் வரைவாளே, அப்படி
வயிற்றுக்குள் வரைந்தாளா?
நாங்கள் இருவரும் சேர்ந்தா..? ஒரு காம முயக்கத்தின் விளைவாகவா இப்படி
ஒரு அற்புதம்..? எந்த இரவில் , எந்தக் கணத்தில் நிகழ்ந்திருக்கும் ?ஏன்
எங்களுக்கு அந்தக் கணத்தின் அருமையும் புனிதமும் புரியாமல் போனது..??
- பாக்கியம் பிறந்திருக்கிறாள் சிறுகதையில் எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு.
================
நன்றி: மூக்கு சுந்தர்.
http://mynose.blogspot.com/2004_07_01_mynose_archive.html
இன்விடேஷன் நல்லாயிருக்கு அருள்!
எல்லாரும் வந்துருங்கப்பா!
எம்.கே.
ரெ.கா வின் நிகழ்ச்சியில் எப்படியாவது கலந்து கொள்ள ஆசை. ஆனால் அன்றைக்கும் (ஞாயிற்றுக்கிழமை) வேலை. எப்படியும் நிகழ்ச்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அந்த அழைப்பிதழ் அச்சிட்ட கைக்கு தங்க மோதிரம் போடலாம் என்று விஜயிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அந்த கை உங்க கைதானா அருள் ? ( அழகான design )
கைக்கு தங்க மோதிரம் ?
????????
விரலுக்குத்தானே?
நிச்சயமாப் போடலாம், போடலாம்.
ஹி ஹி,..
கையோ விரலோ எதுவானாலும் ரெடி. பரிசளிப்பு எப்போ எங்கே?
Post a Comment
<< Home