Wednesday, March 30, 2005

தங்க முனை விருதுப்போட்டி 2005 (NAC-SPH Golden Point Award)

வணக்கம்.

கடந்த சில வருடங்களாக சிங்கையின் தேசிய கலைகள் மன்றம், SPH ஆதரவுடன் ஈராண்டுக்கொருமுறை நடத்திவரும் தங்க முனை விருதுப்போட்டியின் (NAC-SPH Golden Point Award) இந்த வருடத்துக்கான அறிவிப்பு நாளிதழ்களில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இது சிங்கையின் அதிகாரத்துவ மொழிகளான மலாய், ஆங்கிலம், மாண்டரின்(சீனம்) மற்றும் தமிழில் நடைபெறும் என்பது நம்மில் பலருக்குத்தெரியும்.

அந்த அறிவிப்பைத் தவறவிட்டிருந்தாலும், நீங்கள் பரிசைத்தவிரவிடமாட்டீர்கள் என்று தெரியும். அதனால் போட்டி பற்றி நாளிதழ்களில் வந்த அறிவிப்பு இங்கே:

--------------------------------------------------------------
தங்க முனை விருதுப்போட்டி 2005

ஒவ்வொருவரின் உள்ளத்தில் குறைந்த பட்சம் ஒரு நல்ல கதை இருப்பதாகக் கூறப்படுகிறது. உங்களுடையது என்ன?

தங்க முனை விருதுப் போட்டி சிங்கப்பூரர்கள் அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசிகளிடமிருந்து மிகச்சிறந்ததும், மிகவும் படைப்புத்திறன் வாய்ந்ததும், அசலானதும், பதிப்பிக்கப்பட்டதுமான சிறுகதை அல்லது கவிதையைப் பெற முயல்கிறது.

ஒவ்வொரு விருதையும் பெறும் வெற்றியாளருக்கு $10, 000 ரொக்கமும், கல்விப்பயிற்சிக்குரிய உதவித்தொகையும் பெற வாய்ப்பிருக்கிறது.

விண்ணப்பப் படிவத்தினைச் சமர்ப்பிக்க வேண்டிய இறுதிநாள்: 23-05-1005.

--------------------------------------------------------------

விண்ணப்ப படிவத்தைப் பெறவும் மற்ற மேல் விபரங்களுக்கும்...

சிறுகதை தமிழ்பிரிவுக்கான முதல்பரிசை கடந்த 2003ல் வென்ற எழுத்தாளர், ஓவியர், கவிஞர் நண்பர் மானச-ஜென் ரமேஸ் அவர்களுக்கும், ரம்யா அவர்களுக்கும் மற்ற றும் வெற்றியாளர்களுக்கும் இந்த தருணத்தில் பாராட்டுக்களும்...

இந்த வருட போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்களும்.

என்றென்றும் அன்புடன்,
அன்பு
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

5 கருத்துக்கள்:

கூறியவர்: Blogger பாலு மணிமாறன்

Good Start Anbu.... Last week i did attend the kavithai book launch of " vijaya bharathi" in singapore....

i want to send a posting to singaimurasu anout it. pls let me know to whom i can send it ?

March 30, 2005 12:20 PM  
கூறியவர்: Blogger அன்பு

நான் சந்தேகப்பட்டமாதிரியே தப்பு நடந்துபோச்சு சாமீ...

தமிழ்முரசில் வந்துள்ள விளம்பரப்படி:

தங்க முனை விருதுப் போட்டி சிங்கப்பூரர்கள் அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசிகளிடமிருந்து மிகச்சிறந்ததும், மிகவும் படைப்புத்திறன் வாய்ந்ததும், அசலானதும், பதிப்பிக்கப்பட்டதுமான சிறுகதை அல்லது கவிதையைப் பெற முயல்கிறது.

பதிக்கப்பட்டது இல்லை....

பதிப்பிக்கப்படாதது... மட்டும்தான் போட்டியில் ஏற்றுக்கொள்ளப்படும். http://www.swf.sg/files/p4.rules.b_w.pdf
பக்கத்தில் உள்ள குறிப்புப்படி:
போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகள் படைப்பாளர்களின் சுயமுயற்சியில் உருவானதாக இருக்க வேண்டும். ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டதாகவோ பிரசுரத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவோ, ஒலிபரப்பப்பட்டதாகவோ இருக்கக்கூடாது.

தமிழ்முரசு அவர்கள் வெளியிடும் செய்தியிலேயே பொருள்/அச்சு/எழுத்துப்பிழை தாரளாமாக இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். அவர்களை இதைக்கவனிக்கவில்லை என்று குறைபட்டால் - கவனிக்கவா போகப்போகிறார்கள்:)

March 30, 2005 12:20 PM  
கூறியவர்: Blogger எம்.கே.குமார்

ஏம்ப்பா, பரிசுத்தொகை எவ்வளவு? 10000 பொற்காசுகளா? சொக்கா!!!!!!!!!!!!! 10000 பொற்காசுகள்.!

மண்டபத்தில் துண்டை விரித்து படடுத்திருக்கும்,
தருமி!

March 30, 2005 7:10 PM  
கூறியவர்: Blogger எம்.கே.குமார்

ஏம்ப்பா, பரிசுத்தொகை எவ்வளவு? 10000 பொற்காசுகளா? சொக்கா!!!!!!!!!!!!! 10000 பொற்காசுகள்.!

மண்டபத்தில் துண்டை விரித்து படுத்திருக்கும்,
தருமி!

March 30, 2005 7:10 PM  
கூறியவர்: Blogger Vijayakumar

நமக்கில்லை... நமக்கில்லை தான்... என்னை மாதிரி தற்காலிக நாடோடிகளுக்கு இல்லை இல்லை தான்....

April 08, 2005 1:58 PM  

Post a Comment

<< Home