சிங்கப்பூர் தமிழ் மொழி நூலுக்கு தமிழக அரசு பரிசு
சிங்க்ப்பூர் சித்தார்த்தன் எனும் புனைபெயரில் எழுதும் சிறந்த உள்ளூர் எழுத்தாளரும் கல்வியாளருமான திரு. பா. கேசவன் எழுதிய "இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம்" என்ற தமிழ் இலக்கண நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்துள்ளது.
தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்குகிறது. சிறுகதை, கதை, கவிதை, நாவல் என்று மொத்தம் 23 பிரிவுகளில் பரிசு வழங்கப்படுகிறது. மொழியியல் பிரிவில் இந்த ஆண்டு சிங்கப்பூரின் திரு. பா.கேசவன் எழுதிய இலக்கண நூலுக்குப் பரிசு கிடைத்துள்ளது.
இது தொடர்பில் திரு. பா. கேசவன் கூறும்போது,
சிங்க்ப்பூர் மொழியியல் துறைக்குக்கிடைத்த அங்கீகாரம் இது. உள்ளூர் எழுத்தாளர்களுக்கு நிச்சயம் இது ஓர் ஊக்கு சக்தியாக அமையும். சிங்கப்பூர் எழுத்தாளர்கள் பெருமைப்படத்தக்க ஒன்று. இவை எல்லாவற்றுக்கும் மேலாகச் சிங்கப்பூர் இளையர்களுக்குத் தமிழ்மொழி மீது ஆர்வம் அதிகரிக்க இந்த பரிசு உதவும். தமிழக எழுத்தாளர்களுடன் போட்டி போட்டு நாமும் எழுதலாம் எனும் தன்னம்பிக்கையை இந்த அங்கீகாரம் அனைவர்க்கும் கொடுக்கும் என்று தனது கருத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
நூலின் பெயர்: இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம்
செந்தமிழின் இலக்கண விதிகள் அனைத்தையும் சுவையான எடுத்துக்காட்டுகளுடன் விளக்கும் அரிய நூல்!
இந்நூல் சென்ற ஆண்டு நர்மதா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

1 à®à®°à¯à®¤à¯à®¤à¯à®à¯à®à®³à¯:
// இவை எல்லாவற்றுக்கும் மேலாகச் சிங்கப்பூர் இளையர்களுக்குத் தமிழ்மொழி மீது ஆர்வம் அதிகரிக்க இந்த பரிசு உதவும். //
//தமிழக எழுத்தாளர்களுடன் போட்டி போட்டு நாமும் எழுதலாம் எனும் தன்னம்பிக்கையை இந்த அங்கீகாரம் அனைவர்க்கும் கொடுக்கும் //
தமிழ் நாட்டினின்று பிரிந்து வெளிநாடுகளில் வாழும் இளையோர், தங்களுக்கு எட்டும் (கிட்டும்) தொலைவில் தமிழ் இலக்கண, இலக்கிய நூற்கள் இன்றி, தமிழ் அமுதை பருகும் பெரு வாய்பபை இழந்தே வருகின்றனர். இக்குறை நீக்க இவைபோன்ற பணிகள் மிகவும் உதவும்.
நல் வாழ்த்துகள்!
அன்புடன்
மன்னை மாதேவன்
Post a Comment
<< Home