Thursday, July 14, 2005

இலக்கியம் என்றால்,.. ..

ஒன்று உண்மையிலேயே நமக்குப் பிடிக்கிறதா பிடிக்க வில்லையா என்பதை நாமே அவ்வளவு சீக்கிரம் உணர்ந்து விடமுடியாது. எத்தனையோ மாயைகள் நமது அறிவையும் மனசையும் ஆத்மாவையும் மறைக்கிற போது நமக்குப் பிடிக்காதவைகூடப் பிடித்தவை போன்றும் பிடித்தவை கூடப் பிடிக்காதவை போன்றும்; பிடிபடாதவை போன்றும் மயக்கங்கள் ஏற்படும்.

இவைதாம் அனுபவங்கள். பிடித்தவையும் பிடிக்காதவையும் பிடித்தது என்று நாம் முதலில் நினைத்துப் பின்னர் பிடிக்காமற்போனவையும், பிடிக்காதவை என்று நாம் ஒதுக்கியவை பின்னர் பிடித்தவையாகி நம்மை வந்து சிக்கெனப் பிடிப்பதும் எல்லாமே அனுபவங்களாகும்.

அனுபவத்தால் அறிந்ததைப் பிறகும் அனுபவிக்கும் படி அறியச் சொல்லி, அதன் விளைவை அனுபவித்து அறிந்து கொள்வதே இலக்கியமும், இலக்கியத்தின் பயனும் ஆகும்.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவலில் (மீனாட்சி புத்தக நிலையம் வெளியீடு) தனது முன்னுரையில் கூறியது (பக்கம் 10/11 களில் பிரசுரமாகியிருக்கும் முன்னுரையின் ஒரு பகுதி).
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

1 கருத்துக்கள்:

கூறியவர்: Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady

ஜெயந்தி சங்கர்..
அனுபவத்தினை இலக்கியமாக்கியது ஜெயகாந்தன் கூறிய கருத்து ஒரு பகுதியில் உண்மை என்றாலும் எல்லா இலக்கியமும் அனுபவம் அல்ல என்பது என்னுடையத் தாழ்மையான கருத்து.

August 12, 2005 8:30 AM  

Post a Comment

<< Home