Wednesday, July 27, 2005

இண்டிகோ 2005

இண்டிகோ இந்திய திரைப்பட வாரம் இன்று தொடக்கம்

இண்டிகோ திரைப்பட விழா - மேல் விபரம் அறிய சொடுக்குங்கள்...

இந்தியத் திரைப்பட உலகின் பொக்கிஷங்களை வெளிக் கொணரும் “இண்டிகோ-இந்திய திரைப்பட வாரம்” இன்று முதல் தொடங்குகிறது.

மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்ட முகல்-ஏ-அசாம், ஷாபனா அஸ்மி நடித்த “மார்னிங் ராகா”, 2004ம் ஆண்டின் சிகாகோ அனைத்துலகத் திரைப்பட விழா வில் சிறந்த கலைச்சித்திர விருதை வென்ற “பார்ன் இண்டு பிராத் தல்ஸ்” போன்ற பல திரைப் படங் களை இவ்வாண்டு திரைப்பட விழாவில் கண்டு ரசிக்க முடியும். சிங்கப்பூரில் மூன்றாவது ஆண்டாக இவ்வாண்டு திரைப்பட விழா இன்று தொடங்குகிறது.

சிங்கப்பூர் திரைப்படச் சங்க ஆதரவுடன் ஆனந்த் ரீகோ, சங்கீதா மாதவன் இத்திரைப்பட வாரத்திற்கு ஏற்பாடு செய்திருக் கின்றனர்.

திருமதி சங்கீதா மாதவன் இண்டிகோவைப் பற்றிக் குறிப்பிடும்போது,
“தமிழ், இந்தி, தெலுங்கு மலையாளம், மராத்தி, கன்னடம், குஜராத்தி என்று பல மொழிகளில் உள்ள கலையம்சம் மிக்க சிறந்த படங் களை அடையாளம் காட்டுவது திரைப்பட விழாவின் நோக்கம்” என்றும்,

“அந்தக் காலத்திலேயே மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப் பட்ட முகல்-ஏ-ஆஸம் திரைப் படத்தைப் பலர் பார்க்கத் தவறி இருக்கலாம். இளம் தலைமுறை யினருக்கு அப்படி ஒரு திரைப் படம் இருந்ததே தெரியாமல் இருக் கலாம்” என்று திரையிடப்படும் படங்களின் முக்கியத்துவம் பற்றியும் விவரித்தார்.

1960களில் 15 ஆண்டுகளாக 3 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட திரைப் படம்தான் “முகல்-ஏ-ஆஸம்”.

தற்போது இந்த கறுப்பு-வெள்ளை திரைப்படம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் முழுநீள வண்ணப்படமாக்கப்பட்டுள்ளது.

16-ம் நுìற்றாண்டுக்கு இட்டுச் செல்லும் இந்தத் திரைப்படம் சலீம்-அனார்கலியின் காதல் சித்திரமாக வடிக்கப்பட்டு இருக் கிறது. திரைப்படத்தில் தோன்றும் பிரமிப்பூட்டும் “கண்ணாடி மாளிகைகள்” இன்றும் இத்திரைப் படத்தைக் கண்ட பலருக்கு மறக்க முடியாத காட்சிகளாகும்.



திரைப்பட விழாவில் திரையேறும் மற்றொரு படம் பார்ன் இண்டு பிராத்தல்ஸ். கோல்கத்தா நகரின் சிவப்பு விளக்குப் பகுதியில் வசிக்கும் சிறார்களின் வாழ்க்கைப் பற்றிய கதை.

இந்த திரைப்படம் இந்த வாரயிறுதியில் (ஜீலை 30 சனி, மாலை 3 மணி மற்றும் 5 மணி) சிங்கப்பூர் வரலாற்று அருங்காட்சியகத்தில் திரையிடப்படுகிறது.

“பார்ன் இண்டு பிராத்தல்ஸ்” பற்றிய ரம்யா அவர்களின் பதிவு இங்கே...



அஸ்வின் குமார் எழுத்து, இயக்கம், தயாரிப்பில் லிட்டில் டெரரசிஸ்ட் மற்றும் ஒரு வித்தியாசமான திரைப்படம். பத்து வயதுப் பாகிஸ்தானியச் சிறு வன் கிரிக்கெட் விளையாடும் போது தவறுதலாக இந்திய நாட்டின் எல்லையைக் கடந்து விடுகிறான். அதனால் சிறுவன் சந்திக்கும் பல பிரச்னைகள், குழப்பங்கள் இப்படத்தின் காட்சி களாக அமைகின்றன. இது இந்த வருடம் ஆஸ்கருக்கு முன்மொழியப்பட்ட திரைப்படம். பல நாடுகளில் பல்வேறு விருதுகளை அள்ளிக்குவித்திருக்கிறது.

திரைப்பட விழாவில் இடம் பெறும் மற்றொரு படம்.”மார்னிங் ராகா”. குணசித்திர நடிகை ஷாபனா அஸ்மி இப்படத்தின் நாயகி. தென்னிந்திய கர்நாடக இசைப் பாடகராக அவர் தோன்று கிறார். விபத்து ஒன்றில் தமது மகனையும் உற்ற நண்பரையும் இழந்த சுவர்ண லதாவின் மனதை “மார்னிங் ராகா” படம் பிடித்துக் காட்டுகிறது.

மொத்தம் ஒன்பது திரைப் படங்கள் இவ்வாண்டு இண்டிகோ திரைப்பட வாரத்தில் திரையிடப் படுகின்றன. ஜிவி கிராண்ட் கிரேட் வேர்ல்டு சிட்டி, சிங்கப்பூர் வரலாற்று அருங்காட்சியகத்தில் உள்ள திரையரங்குகளில் இம் மாதம் 27ம் தேதி முதல் ஆகஸ்டு 3ம்தேதி வரை இந்தத் திரைப்படங் களைக் காணலாம். நுழைவுச் சீட்டின் விலை $9.50.

மேலும் விவரம் வேண்டுவோர் www.sfs.org.sg என்ற இணையப் பக்கம் மூலம் அறியலாம் அல்லது 90170160 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.

தகவல்களுக்கு நன்றி: தமிழ்முரசு மற்றும் சிங்கப்பூர் திரைப்பட சங்கம்.
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

3 கருத்துக்கள்:

கூறியவர்: Blogger அன்பு

ஈழநாதன் இலங்கை சென்றிருப்பதால், இண்டிகோ விடயமாக என்னைப் பதிக்கச்சொல்லிக்கேட்டு காலம் கடத்திவிட்டேன். தாமதமான பதிவுக்கு மன்னிக்கவும்.

இன்று பார்த்தால்... பெரும்பாலான காட்சிகளுக்கு சீட்டு விற்று முடிந்துவிட்டது.

மேல் நிலவரம் அறிய...

கோல்டன் வில்லேஜ் - முன்பதிவுக்கு...

July 27, 2005 1:08 PM  
கூறியவர்: Blogger Ramya Nageswaran

பத்தே Rows இருக்கும் திரைப்பட அரங்கை ஏன் தேர்வு செய்தார்கள் என்று புரியவில்லை. Budget constraints காரணமாக இருக்கலாம். இன்று மாலை மூன்றாவது ரோவில் அமர்ந்து முகல்-ஏ-ஆஸாமை பார்க்கப் போகிறேன்.

July 27, 2005 2:18 PM  
கூறியவர்: Blogger SunTVian

Check out http://suntv.blogspot.com for latest updates on Sun TV shows.
Thanks!

August 08, 2005 11:25 AM  

Post a Comment

<< Home