Wednesday, April 06, 2005

உலகின் முதல் தமிழ் அசைபட இணையச் செயலி - ஒரு அறிமுகம்

(Words first Tamil online animation tool)
சென்ற ஆண்டு ஆகஸ்டு 9 அன்று (சிங்கையின் தேசிய தினம்) இணைய வெளியீடு கண்ட இந்த செயலிக்கு இப்போது 66 பயனர்கள் உள்ளனர். போதிய விளம்பரமும் விளக்கமும் இல்லாததுதான் தொலைபேசிவழி இணைப்பில்கூட பயன்படுத்தக்கூடிய இந்த இலவசச் செயலி குறைவான பயனர்களை கொண்டிருக்கக் காரணம். அந்த குறையை களைவதே இந்த பதிவின் முக்கிய நோக்கம்

அசைபடக்கலை தாளிலிருந்து கணினிவரை - சிறு அறிமுகம்

ஆரம்ப நாட்களில் அசைபடங்களை உருவாக்குவதில் அதிக சிரமம் இருந்தது, வினாடிக்கு 24 படங்கள் வீதம் தாளில் வரைந்த்துகொண்டு ஒவ்வொன்றாக அடுத்தடுத்து புகைப்படம் எடுத்தார்கள். பிறகு செல்லுலோஸ் அட்டைகளில் வரவு அசைபடத்துறையில் பெரும் மாறுதலை கொண்டுவந்தது. கண்ணாடி போன்று ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட செல்லுலோஸ் அட்டைகளை உபயோகித்து ஒரே நேரத்தில் பலரும் ஒரே படத்துக்கான பல பாகங்களை தனித்தனி அட்டைகளில் வரைந்து பின் அவைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி படமெடுப்பார்கள். வரைந்த இடங்கள் போக மிச்சமிருக்கும் இடம் கீழ் இருக்கும் அட்டையில் வரையப்பட்டதை காட்டும். கதாபாத்திரங்களைத் தனித்தனி அட்டைகளில் வரைந்துகொள்வதால் விருப்பம் போல நகர்த்தி படம் பிடிக்கலாம். இதனால் அசைபடக்கலைக்கு செல் அனிமேஷன் என்ற பெயர் ஏற்பட்டு நிலைத்தது.

ஒரு கலைஞரே எல்லா கதாபாத்திரங்களின் முகபாவத்தையும் சிறப்பாக பிரதிபலிக்கும்படி வரைவது கடினம் எனவே செல்லுலோஸ் அட்டையில் ஆளுக்கொரு கதாபாத்திரத்தை தொடர்ந்து வரைவார்கள்

தவிர ஒரு வினாடிக்கு 24 படம் என்றால் ஒரு கார்டூன் கலைஞர் முழுக்க தன் கையாலேயே வரைய வேண்டும் என்றால் அரை மணிநேர படைப்பை அவர் நிகழ்த்த எத்தனை நேரம் தேவைப்படும்?

எனவே அவர் (Key Artist) முக்கிய மாற்றங்களை மட்டும் வரைவார். அவற்றிற்கு கீ ஃப்ரேம் (Key Frame) என்று பெயர். இரண்டு கீ பிரேமுக்கு இடையே உள்ள படிப்படியான மாற்றங்களை மற்ற கலைஞர்கள் கவனித்துக்கொள்வார்கள் அவர்களுக்கு இன்பிட்வீனிங் ஆர்டிஸ்ட் (Inbetweening Artist) என்று பெயர். இது நாளடைவில் சுருங்கி டுவீனிங் (Tweening) ஆர்டிஸ்ட் என்று மாறிவிட்டது. இந்த வேலைக்கும் டுவீனிங் என்றே பெயராகிவிட்டது.

பின்னர் கணினிகளை அசைபடக்கலைக்கு பயன்படுத்தத் துவங்கினர். செல்லுலோஸ் அடுக்குகள் (Layers) போன்ற மெய்நிகர் அடுக்குகளை கணினிகள் திறம்பட சமாளித்தன. அவை மட்டுமல்ல பெரும்பாலான டுவீனிங் வேலைகளை தாங்களே பார்த்துக்கொண்டன.

கனவுலகம்

நீங்கள் பார்க்கப் போகும் இந்தச்செயலியும் மேற்கண்ட செயல்களை எளிதில் கையாளக் கூடியது அதன் அடிப்படைகளை எளிமையாக போதிக்கக் கூடியது.

இதில் பத்து காலப்பகுப்புகள் (Key Frames) உள்ளன. உங்களால் உள்ளிடப்பட்ட வடிவங்கள் இந்த பத்து காலப்பகுப்பிலும் எந்தெந்த இடத்தில் இருக்கவேண்டும் என்று கீ ஆர்டிஸ்டான நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அந்தந்த இடங்களுக்கு செல்ல வேண்டுமானால் எப்படி நகர வேண்டும் என்பதை டுவீனிங் ஆர்டிஸ்டான கணினி பார்த்துக்கொள்ளும்.

முதன் முதலாய் ...

உங்கள் பெயரை பதிந்துகொண்டு உள் நுழைந்த பின் "திற" என்னும் விசையை அழுத்தி "மீன் முத்தம்" எனும் எடுத்துக்காட்டை திறக்கவும் பின்னர் "Play" விசையை அழுத்தி ஒரு முறை எப்படி இயங்குகிறது என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

பின்னர் மீன் வடிவத்தை சொடுக்கி வேண்டிய மாற்றங்கள் செய்து மீண்டும் இயக்கிப் பார்க்கவும்

மிச்ச விஷயங்கள் உங்களுக்கு புரியாதவையாக இருக்காது என்று நம்புகிறேன். புகுந்து விளையாடுங்கள் :)

தொடுப்பு

உங்கள் நண்பர்களுக்கும் கனவுலகை அறிமுகப்படுத்த கீழ்க்கண்ட நிரல்துண்டை உங்கள் வலைப்பதிவின் டெம்ப்ளேட் பகுதியில் சேர்த்து உதவலாம்


இந்த நிரல் சேர்க்கப்பட்ட பின் கீழ்க்காணும் இணைப்பு உங்கள் வலைப்பதிவில் தென்படும்தமிழ் அசைபட இணையச் செயலி
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

2 கருத்துக்கள்:

கூறியவர்: Blogger பாலு மணிமாறன்

I have added kanavulagam in my blog... pls do add it in SINGAI MURASU too

April 07, 2005 12:18 PM  
கூறியவர்: Blogger Vijayakumar

எனக்கும் ஃபிளாஷைப் பற்றி கொஞ்சம் தெரியுமாதலால், தாங்களின் இந்த கனவுலகம் படைத்த முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது.இதன் பின் இருக்கும் உங்களின் முயற்சி தெரிகிறது.எவ்வளவு கஷ்டமான வேலையையும் லட்சியத்துடன் செய்து முடிக்கும் உங்களின் விடமுயற்சியைப் பாராட்டிகிறேன். உங்கள் நிரலை இதோ என்னுடைய வலைப்பதிவில் இணைத்து விடுகிறேன். நன்றி அருள்.

April 08, 2005 1:55 PM  

Post a Comment

<< Home